காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!
25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோயை பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “கலைஞர் நாணயத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது” – முதலமைச்சர் #MKStalin பேச்சு!
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது :
"கடந்த ஜூன் மாதத்தில் கழிவுநீரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது. ஒரு குழந்தைக்கு போலியோ அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பிறகு, தொற்று உறுதி செய்யப்பட்டது"
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.