Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலமேடு ஜல்லிக்கட்டு | களத்தில் கெத்து காட்டிய செந்தில் தொண்டமானின் காளைகள்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானின் 3 காளையும் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. 
03:11 PM Jan 15, 2025 IST | Web Editor
Advertisement

இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, இன்று (ஜன.15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் காலை 7.40 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Advertisement

இதில் 1000-ற்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.

போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாவது சுற்று முடிவில் 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது 7வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானின் 3 காளையும் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

Advertisement
Next Article