For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RatanTata உடனான சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பாகிஸ்தான் பாடகர்!

04:24 PM Oct 12, 2024 IST | Web Editor
 ratantata உடனான சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பாகிஸ்தான் பாடகர்
Advertisement

பாகிஸ்தான் பாடகர் ஜோஹெப் ஹாசன், ரத்தன் டாடாவை முதன்முதலில் சந்தித்தபோது, ​​"இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபர்களில்" ஒருவரைச் சந்திப்பதாக தனக்குத் தெரியாது என்று நினைவு கூர்ந்து நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Advertisement

ரத்தன் டாடா கடந்த 09.10.2024 அன்று காலமான நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக சமூக வலைதளங்களில் அஞ்சலிகள் தற்போது வரை குவிந்து வருகின்றன. இதில் ரத்தன் டாடாவுடன் தங்கள் தொடர்பு மற்றும் அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து பலர் தங்கள் வருத்தத்தையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இதே போன்று பாகிஸ்தான் பாடகர் ஜோஹெப் ஹாசனும் ரத்தன் டாடாவுடனான தனது சந்திப்பை நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உணர்ச்சிப்பெருக்குடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதன்முறையாக ரத்தன் டாடாவை சந்தித்ததையும், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபரின் வீட்டிற்குச் சென்றபோது அவர் எப்படி அதிர்ச்சியடைந்தார் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

அதில், ஒரு நாள், ரத்தன் டாடாவிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது, அப்போது, சிபிஎஸ் இந்தியா என்ற இசை நிறுவனத்திற்காக ஆல்பம் ஒன்றை பதிவு செய்ய அவரையும் அவரது மனைவியையும் அழைத்திருக்கின்றனர். அப்போது அவர் யாருடன் பேசுகிறார் என்று அவருக்கு தெரியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, டாடா அவரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அப்போது, புன்னகையுடன் மிகவும் மென்மையாக பேசும் மனிதரை அன்று, சந்தித்ததை ஜோஹெப் ஹாசன் நினைவு கூர்ந்தார்.

https://www.facebook.com/zohebhassanfanpage/posts/1096944921792411?ref=embed_post

ரத்தன் டாடாவின் வீடு பாடகரை ஆச்சரியப்படுத்தியது ஏன்?

"ஆல்பத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, நாஜியாவையும் என்னையும் ரத்தன் டாடா தனது வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்தார். அவர் ஒரு அரண்மனையில் வாழ்வார் என்று நினைத்தோம். நாங்கள் சென்றடைந்தபோது, ​​இந்தியாவின் மிக சக்திவாய்ந்த தொழிலதிபர் இவ்வளவு எளிமையான இடத்தில் வாழ்ந்தார் என்று நாங்கள் திகைத்துப் போனோம். ஒரு சிறிய 2 அறைகள் மட்டுமே உள்ள வீடு நேர்த்தியாக இருந்தது. ஒரு பெரிய மனிதருடன் ஒரு எளிய இரவு உணவை உண்டோம். அந்த நாளை இன்றுவரை என்னால் மறக்க முடியாதது" என்று ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தனித்துவமான தொழிலதிபராகவும் உண்மையான சிறந்த மனிதராகவும் ஒருவர் வாழ முடியும் என்பதற்கு சாட்சியாக நம்முன் வாழ்ந்தவர் ரத்தன் டாடா. அவரை இழந்துவிட்டோம் என்று தனது பதிவில் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ரத்தன் டாடாவுடனான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Tags :
Advertisement