For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் - வீடியோ வைரல்!

08:06 AM Jun 19, 2024 IST | Web Editor
ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்   வீடியோ வைரல்
Advertisement

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹரிஸ் ரவுப் ரசிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹரிஸ் ரவுப் தன்னுடைய மனைவியுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர்கள் ரவுப்பை விமர்சிக்கும் வகையில் ஏதோ சொல்கின்றனர். இதனால் கோபமடைந்த ஹரிஸ் ரவுப் ரசிகர்களை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். அங்குள்ள ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், இது குறித்து ஹாரிஸ் ரௌஃப் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "இந்த விஷயத்தை சமூக வலைதளத்துக்கு கொண்டுவர வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் வீடியோ வெளிவந்த பிறகு இது குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை. பிரபலங்களாக இருப்பதால் ரசிகர்களின் கருத்துகளுக்களை கேட்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவோ அல்லது விமர்சிக்கவோ செய்யலாம். ஆனால், அவர்கள் எனது பெற்றோரைப் பற்றியோ அல்லது குடும்பத்தைப் பற்றியோ விமர்சித்தால் அதற்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement