Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை - ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு !

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
04:20 PM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, இம்ரான்கானுக்கு சொந்தமான ஆல்-கதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளனர். அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாகவும் இம்ரான் கான் மீது கடந்த 2023 ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

Advertisement

இது குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தற்போது அதற்கான தண்டனை விவரங்களை பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Tags :
casecorruptionImran KhanjailPakistanipakisthan courtPrison
Advertisement
Next Article