#England -ல் இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கு - குற்றவாளிக்கு அக்.10ல் தண்டனை!
இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தின் மேலாளர் கொலை வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த ஷாசெப் காலித் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
விக்னேஷ் பட்டாபிராமன் என்ற இந்தியர் (தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர்), இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் உள்ள வெல் என்ற இந்திய உணவகத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார். கோவையை சேர்ந்த இவர், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, தன் மனைவி ரம்யாவுடன் இவர் பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கு சொந்தமாக உணவகம் வைக்க வேண்டும் என்ற கனவில் இருந்த இவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தன் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கடுகன் பிளேஸ் என்ற சந்திப்பில் இரவு 11:50 மணியளவில் வந்த வாகனம் ஒன்று இவர்மீது வேகமாக மோதியுள்ளது.
இதனால் பலத்த காயம் அடைந்த விக்னேஷ், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. முதலில் இதை சாலை விபத்தாக பலரும் கூறிய நிலையில், இது கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து, தேம்ஸ் பகுதி போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்கள் : #PMNarendraModiன் பிறந்தநாளையொட்டி சைவ விருந்து ஏற்பாடு – அஜ்மீர் தர்கா நிர்வாகம் அறிவிப்பு!
இது வழக்கு தொடர்பான விசாரணை காவல்நிலையத்தில் கடந்த 28 நாட்களாக நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நேற்று ரீடிங் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷாசெப் காலித் (25) என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.அவருக்கு அக்டோபர் 10-ம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது.