For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே தொடருக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

06:37 PM Oct 27, 2024 IST | Web Editor
ஆஸ்திரேலியா  ஜிம்பாப்வே தொடருக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் டி20 போட்டிகள் நவ.14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக யாரும் நியமிக்கப்படாக நிலையில், பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், பைசல் அக்ரம், ஹரிஸ் ரவூப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம். முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முஹமது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் ஷா அப்ரிடி.

டி20 அணி: அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், ஹரிஸ் ரவூப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா. உமைர் பின் யூசுப் சாஹிப்சாதா பர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் ஷா அப்ரிக்டி, சுப்யான் மொகிம் மற்றும் உஸ்மான் கான்.

ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.

ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, அகமது டேனியல், பைசல் அக்ரம், ஹரிஸ் ரவூப், ஹசீபுல்லா, கம்ரன் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முஹமது இர்பான் கான், சைம் அயூப், சல்மான் அலி தஹான் ஆகா, ஷானாவாஸ் தஹானி மற்றும் தய்யாப் தாஹிர்

டி20 அணி: அகமது டேனியல், அராபத் மின்ஹாஸ், ஹரிஸ் ரவூப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி. முகமது ஹஸ்னைன். முஹமது இர்பான் கான், உமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சாஹிப்சாதா பர்ஹான், சல்மான் அலி ஆகா, சுப்யான் மொகிம், தய்யாப் தாஹிர் மற்றும் உஸ்மான் கான்

Tags :
Advertisement