தீடீரென ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை தொடங்கிய பாக் - நடுவானில் தகர்த்து வரும் இந்திய ராணுவம்!
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்தியா நேற்று(மே.07) ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு நேற்று இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது. இதில் இதுவரை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் மற்றும் 16 பொதுமக்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு பதிலடி கொடுப்பதாக இரு நாடுகளும் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் ஜம்மு பகுதியில் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்களுக்கு சைரன் சத்தம் எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான மின் தடை செய்து பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ட்ரோன்களை நடுவானில் தகர்த்து வருகிறது.