For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உலகக் கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும்!” - முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி விருப்பம்!

11:25 AM Nov 09, 2023 IST | Web Editor
“உலகக் கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும் ”   முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி விருப்பம்
Advertisement

உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற வேண்டும் என விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,  BCCI -ன் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

Advertisement

மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தியதன் வாயிலாக இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தேர்வானது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து தான் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளது.  இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானது.

ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பதன் வாயிலாக இந்த அணி, தென்னாப்பிரிக்காவுடன் அரையிறுதியில் மோதுவது உறுதியாகியுள்ளது.  அதேவேளையில், உலகக்கோப்பை தொடரில் இலங்கை,  இங்கிலாந்து,  பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் நாக் அவுட் சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பில்லை.

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெருவதற்கான வாய்ப்பை நியூசிலாந்து,  பாகிஸ்தான்,  ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தற்போது வரை தக்கவைத்துள்ளன.  இந்த 3 அணிகளில் தற்போது நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்தாலும்,  அந்த அணி ஆடவுள்ள அடுத்த போட்டியில் தோற்றாலோ அல்லது போட்டியின் போது மழை குறுக்கிட்டாலோ நிலைமை மாறலாம்.  இது பாகிஸ்தான் அணி எளிதில் அரையிறுதிக்கு தகுதி பெற வழிவகுக்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்தியாவுடன் விளையாட வேண்டும். அப்படி விளையாடும் பட்சத்தில் அந்தப்போட்டி  சிறந்த அரையிறுதி போட்டியாக பதிவாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், BCCI -ன் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement