Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8-வது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான பாகிஸ்தான்!

04:44 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கெடுப்பில் மொத்தம் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் உறுப்பினர் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 2026ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. முன்னதாக பொறுப்பில் இருந்த ஈக்குவடார், ஜப்பான், மால்டா, மொசாம்பி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை பதிலீடு செய்யவுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது பெருமைக்குரிய நிகழ்வு என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார். பாகிஸ்தான் 8வது முறையாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐநாவின் புதிய தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பிலிமோன் யாங் பொது அவையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Non-Permanent MemberspakistanUN Security CouncilUnited Nations
Advertisement
Next Article