For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஊழல் வழக்கு - இல்லத்திலேயே இம்ரான்கான் மனைவி புஷ்ராவுக்குச் சிறை...!

10:59 AM Feb 02, 2024 IST | Web Editor
ஊழல் வழக்கு   இல்லத்திலேயே இம்ரான்கான் மனைவி புஷ்ராவுக்குச் சிறை
Advertisement

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரானின் இல்லத்திலேயே சிறைவைக்கப்பட்டார்.

Advertisement

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள் ; இங்கிலாந்தில் 285 வயது எலுமிச்சை ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம்!

மேலும் தனது ரகசியக் காப்புறுதியை மீறி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர்  மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு ஊழல் வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தபோது அவருக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 31 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவரும் 10 ஆண்டுகள் அரசு பதவிகளில் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு நடைபெற்று வந்த அடியாலா சிறையில் புஷ்ரா பீவி ஆஜரானார். மேலும், இந்த சிறையில்தான் வேறொரு வழக்கு தொடர்பாக இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இஸ்லாமாபாதிலுள்ள இம்ரான் கான் இல்லத்தின் ஒரு பகுதி சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா நேற்று சிறைவைக்கப்பட்டார்.

Tags :
Advertisement