Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயஎந்துள்ளது.
07:25 PM Aug 17, 2025 IST | Web Editor
பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயஎந்துள்ளது.
Advertisement

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பாலங்கள் மற்றும் இணைப்புப் பாதைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெள்ளம் காரணமாக அழிக்கப்பட்டதால் நிவாரணப் பணிகள் சிக்கலாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வானிலை ஆய்வு மையமானது ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை வுடுத்துள்ளது. வடமேற்குப் பகுதிகளில் உள்ள மக்கள் "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை" எடுக்குமாறும்  வலியுறுத்தியது.

 

Tags :
FloodheavirainlatestNewspakistanWorldNews
Advertisement
Next Article