For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்...!

07:01 AM Jan 05, 2024 IST | Jeni
நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்
Advertisement

நாசா வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4-ம் வகுப்பு படிக்கும் லயாஷினி, 7-ம் வகுப்பு படிக்கும் தித்திகா ஆகிய மாணவிகள் வரைந்த ஓவியங்கள், 2024-ம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் காலண்டரில் இடம்பெறும் 12 பக்கங்களுக்கும் ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, உலகளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் படங்களை காலண்டரின் 12 மாதங்களுக்கான பக்கங்களில் பிரசுரிப்பதும் வழக்கம்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து நான்கு வயது முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். அந்த வகையில் பழனி அருகே உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த துகிலோவியா, லயாஷினி, தித்திகா ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் ஸ்பேஸ் கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் ஓவியங்கள் வரைந்து போட்டிக்கு அனுப்பினர்.

இந்த மூன்று ஓவியங்களையும் 2024-ம் ஆண்டிற்கான காலண்டரில் அச்சிட நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஓவியங்கள் நாசாவின் காலண்டரில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. உலகளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து 25,000 மாணவ மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இதையும் படியுங்கள் : 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!

தொடர்ந்து 5-வது முறையாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவதும், உலகளவில் நடந்த போட்டியில் இந்தியாவில் இருந்து தேர்வான 5 ஓவியங்களில் 3 ஓவியங்கள் தமிழ்நாட்டு மாணவிகளுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement