Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடக்கம்!

08:41 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் இன்று தொடங்கியது.

Advertisement

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் பத்மாவதி பரிணய
உற்சவம் என்ற பெயரில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி பரிணய உற்சவ பூந்தோட்டத்தில் மூன்று நாட்கள்
நடைபெறும் பரிணய உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பரிணய உற்சவம் இன்று தொடங்கி உள்ளது.  மூன்று நாட்கள் நடைபெறும் இந்த  உற்சவத்தின் முதல் நாளான இன்று உற்சவர் மலையப்ப சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு கஜவாகனத்தில் எழுந்தருளி பரிணய உற்சவ தோட்டத்தை அடைந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதையும் படியுங்கள் : மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? – பிரதமர் மோடி பதில்!

தொடர்ந்து உபய நாச்சியாளர்கள் ஆன ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவர்கள்
பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக பரிணய உற்சவ மண்டபத்தை அடைந்தனர். மேலும், அங்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து உற்சவர்கள் மாட வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர்.

Tags :
devoteesPadmavati Parinaya Utsavamsami dharshanTirupatitoday
Advertisement
Next Article