For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

07:20 PM Apr 22, 2024 IST | Web Editor
வெங்கையா நாயுடு  உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு
Advertisement

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில்  132 பேருக்கு பத்ம  விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார்.

Advertisement

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

இதையும் படியுங்கள் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “கூலி” – டைட்டிலை வெளியிட்டது படக்குழு!

அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவிக்கப்பட்டது.  அதன்படி 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்ளதுறை அமைச்சர் அமிக்க்ஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக, 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.மேலும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபுஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

Tags :
Advertisement