நெல்லை | பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் - மடக்கி பிடித்த பொதுமக்கள்!
நெல்லையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடன் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த மகாதேவன் குளம் பகுதியைச் சேர்ந்தவர்
சுந்தரி (42). இவர் நேற்று இரவு அதே ஊரில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (20) என்ற இளைஞர் அவரை பின் தொடர்ந்து வந்தார். எதிர்பாராத நேரத்தில் அந்த இளைஞர் சுந்தரி அணிந்திருந்த 6 சவரம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். உடனடியாக சுந்தரி கத்தி கூச்சலிட்டார்.
இதையும் படியுங்கள் : வசூலில் மாஸ் காட்டும் #Pushpa2… 14 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை வளைத்து
பிடித்தனர். அவர் பறித்துச் சென்ற தங்க நகையையும் மீட்டனர். மேலும், அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் இது போன்ற வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.