அடுத்த ஆண்டு வெளியாகும் 'பாட்டல் ராதா' - ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
'பாட்டல் ராதா' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24ந் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
தற்போது பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு, 'பாட்டல் ராதா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரமும், சஞ்சனா நடராஜன் , பாரி இளவழகன் (ஜமா), ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இதற்கிடையில், இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியாகும் என நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.