For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
07:18 PM Mar 16, 2025 IST | Web Editor
“இந்திய அளவில் நம் தமிழும் ஹிட்  பட்ஜெட்டும் ஹிட்”   முதலமைச்சர் மு க  ஸ்டாலின்
Advertisement

உங்களில் ஒருவன் காணொளி வாயிலாக மக்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று(மார்ச்.16) தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 குறித்து காணொளி வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில்  அவர் பேசியதாவது,  “பட்ஜெட் லோகோவில் நம்ம மொழிக் கொள்கையில் எந்த அளவு உறுதியாக இருக்கிறோம் என்பதைக் காட்ட ரூ என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள் அதை பெரிய செய்தியாக ஆக்கிவிட்டார்கள். மத்திய அரசிடம் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம், பேரிடர் நிதி, கல்வி நிதிகளை தாருங்கள்  என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகளை வைத்திருந்தேன். அதற்கெல்லாம பேசாத மத்திய அமைச்சர்  இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அவர்களே பல பதிவுகளில் ரூ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் கூட எல்லோரும் Rupees-ஐ சிம்பிளாக Rs என்றுதான் குறிப்பிடுவார்கள். அட்தெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சனையாக தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட்.

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலொசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்ளோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், ரான் திரியஸ், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் பட்ஜெட் நிறைய ஆலோசனையை வழங்கினார்கள் மறுபுறம் அடித்தட்டு மக்களிடம் அவர்களின் தேவை என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டோம். அது மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் மக்களிடம் ரீச் ஆன திட்டங்கள் என்னவென்று பார்த்து அதை நம் மாநிலத்திகேற்ப கொண்டுவர முடிவெடுத்தோம்.

பட்ஜெட் குறித்து இந்தியா முழுக்கவுள்ள அனைத்து  நாளிதழ்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு செக் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று கூசாமல் கேட்பவர்கள் பத்திரிக்கைகளை படிக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் எனக்கு எல்லாமே நெருக்கமானதுதான்.  மக்களுக்கு எது பிடித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள சமூக வலைத்தளங்களில் அவர்களின் பதிவுகளைப் பார்த்தேன். பலர் பாராட்டியிருந்தனர்.  அதேபோல் பொருளாதாரா வல்லுநர்கள் பாராட்டியதையும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்திருந்தால் அதற்கு பதிலளிக்கலாம். ஆனால், அவர்களின் விமர்சனத்தில் அரசின் மீதுள்ள வன்மம் மட்டும்தான் தெரிகிறது. உருப்படியாக அதில் ஒன்றுமில்லை. 2011-ல் இருந்து 2014 வரைக்கும்  நம்முடைய கடன் வளர்ச்சி 108 விழுக்காடு. இது 2016ல் இருந்து 2021ல் 128 விழுக்காடு அதிகரித்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இப்போது வரை 93 விழுக்காடுக்காக குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது என அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. கடன் வாங்காத அரசு எதுவும் இல்ல. வாங்கும் கடனை முறையாக செலவு செய்வதுதான் முக்கியம். அந்த வகையில் எதிர்கால தலைமுறைகளுக்கான முதலீடாகத்தான் திமுக அரசு கடன் தொகை செலவு செய்துள்ளது. எதிர்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனங்களை நாளிதழ்களும் வல்லுநர்களும் தவறு என்று சொல்லிவிட்டார்கள். அறிவித்துள்ள பட்ஜெட்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முடுக்கிவுடவுள்ளோம். அதுதான் என்னுடைய அடுத்த வேலை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை மற்றும் நாடாளுமன்ற தொகுதி குறைப்பு, இப்படி நம் மாநிலத்தின் நிதிக்கும் நீதிக்கும்  போராட வேண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 1 ட்ரில்லியன் டாலர்  அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். அதனால் ஓய்வு கிடையாது”

Tags :
Advertisement