லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்..? - துல்கர் சல்மான் தகவல்!
துல்கர் சல்மான் தயரிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கியிருந்த இப்படத்தில் பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார்.
30 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 266 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியிலும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் லோகா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த தகவல்களை படத்தின் தயாரிப்பளர் துல்கர் சல்மான் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"லோகா விரைவில் OTT-க்கு வரப்போவதில்லை. போலி செய்திகளைப் புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.