’தண்டகாரண்யம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தண்டகாரண்யம். இப்படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர், பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம், வருகிற 20-ந் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The revolution has begun. ☭#Thandakaaranyam, streaming on Simply South from October 20 worldwide, excluding India. pic.twitter.com/ygo54Uw4Uc
— Simply South (@SimplySouthApp) October 15, 2025