For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
06:38 AM Jun 19, 2025 IST | Web Editor
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
Advertisement

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் உலகில் அதிக சம்பளம் வாங்கும் சினிமா நடிகராகவும் இருக்கிறார். மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் பிரபலமான இவர், மிகவும் ஆபத்தான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நடிப்பதில் புகழ் பெற்றவர். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல், இவர் நடிப்பில் வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் படத்தின் தொடர்ச்சிகள் அனைத்தும் பெரும் வெற்றியை பெற்றன.

Advertisement

அந்த வகையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிக்காக டாம் குரூஸ் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. டாம் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement