நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி,கோவை போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ – பாலஸ்தீனம் மற்றும் காஸாவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பதாகைகள்!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
"இன்று முதல் ஏழு நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர்,திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்"
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.