Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

12:48 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டுக்கு தீவிரமான வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட் ” எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Advertisement

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக கோடைக்கால தொடக்கத்தில் தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னரே வெயில் கொளுத்தியது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிற்கு  வெப்ப அலைகளுக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
heat waveOrange alertsummerTemperature
Advertisement
Next Article