தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் (டிச. 16, 17) ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(டிச. 16) தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!
அதுபோல நாளை (டிச. 17) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். மேலும் விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து டிச. 18-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும், டிச. 19-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.