Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எதிர்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு...!

எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவையானது மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
01:04 PM Dec 01, 2025 IST | Web Editor
எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவையானது மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement

நாடளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் இன்று தொடங்கியது.  கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த ஐந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்ததாக விருதுகளைப் பெற்ற பல விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதை தொடர்ந்து  12 மாநிலங்களில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க கோரி  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து  மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மக்களவை தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கடும் அமளிக்கு மத்தியில்  சுகாதாரப் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு வரி மசோதா-2025 மற்றும் மத்திய கலால் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட  மசோதாக்களை அறிமுகம் செய்தார்.

இதையடுத்து மக்களவையில் அமளி தொடர்ந்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரானது இரு அவைகளிலும் இன்று  காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டமானது வருகிற 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

Tags :
adjournedIndiaNewslatestNewsloksabhaparliamentwintersessionWinterSession
Advertisement
Next Article