Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!

12:17 PM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.26 தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.20ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்திருந்தனர்.

அதற்கு ஏற்றார் போல் குளிர்கால கூட்டம் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அழைப்பு விடுத்து வருகின்றனா். ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து மத்திய அமைச்சர்கள் யாரும் எதிர்க்கட்சிகளுடன் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க தயங்குகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவை இன்று பிற்பகல் வரையிலும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி டிசம்பர் 2 ஆம் தேதி தான் மாநிலங்களவை மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
adjournedlok sabhaOppositionRajya sabha
Advertisement
Next Article