For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!

02:41 PM Dec 15, 2023 IST | Web Editor
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி   நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச 18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
Advertisement

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர்,  அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் கனிமொழி,  மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 14 பேர் நேற்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல்,  மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும், நேற்று நாடாளுமன்றத்தின் அவைக்குள் போராட்டம் நடத்திய நிலையில் இன்றும் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,  இன்று காலை மக்களவை தொடங்கிய சில நொடிகளிலே எதிர்க்கட்சி எம்.பிக்கள் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் மக்களவை  பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிற்பகலுக்கு பின் அவை மீண்டும் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியை தொடர்ந்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிசம்பர் 18ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement