"அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் " - மேயர் பிரியா விமர்சனம்!
அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் சென்னையில்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த அம்மா உணவகம் பயனுள்ளதாக இருந்தது.
நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமையலறைக்கு சென்ற முதலமைச்சர் தயாராகிக் கொண்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அம்மா உணவக ஊழியர்களிடம், உணவு தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளதாவது..
“ திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார்.