For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“முதலமைச்சரின் அமெ. பயணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

03:37 PM Jul 30, 2024 IST | Web Editor
“முதலமைச்சரின் அமெ  பயணத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு”   அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஐசிடி அகாடமி மற்றும் 72 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் 17 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

“ICT நிறுவனம் 2008ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வளர்ச்சி அடைந்த 10 மாநிலங்களில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக சிறந்த செயல்பாடுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைவருக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனம் அதன் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஐசிடி அகாடமி பயிற்சி திட்டம் ஐடிஐகளுக்கும், பயிற்சி விரிவாக்கம் செய்ய தொழிலாளர் நலத் துறையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்னை ஐடி துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றினார்.

பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் குறிப்பாக பெண்களை மையப்படுத்தி இந்த திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடுவோருக்கான பயிற்சிகள் தான் இந்த திட்டம் மூலமாக வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார் முதலமைச்சர். பள்ளி மாணவர்களுக்கான திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் துறைகளான NSDC, ESSC ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெரும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 102 ஐடிஐ-களுடன் தனித்தனி ஒப்பந்தம் போட்டு வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1500 கல்லூரிகள் ஐசிடியுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகின்றன. ஐசிடியுடன் ரூ.82 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் பயிற்சி பெற்ற 60-70% பேருக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பது இலக்கு.

முதலமைச்சர் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களை ஈர்ப்பது தமிழ்நாட்டில் சிரமம் இல்லை. கர்நாடகாவில் ஐடி-யில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியாகியது. இதனால் அங்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் புதிய ஐடி நிறுவனங்கள் உருவாக வாய்ப்புள்ளது”

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Tags :
Advertisement