ஜப்பானில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு தடை!
ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலை சிறுமைப்படுத்தி எடுக்கப்பட்டதால் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு ஜப்பானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' ME AD திரைப்படம் அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் ஜப்பானைத் தவிர உலகின் அனைத்து இடங்களிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஐமேக்ஸ் திரையரங்குகள் இந்த படத்தை எடுக்க விரும்பாததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் வெளியான 'பார்பி' திரைப்படத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ரஷ்ய அதிபர் தேர்தல் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலை சிறுமைப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் படம் திரையிடப்படாததற்குக் காரணமாகக் கருதப்பட்டன.
அதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் எதுவும் நல்ல முடிவைத் தராத நிலையில் ஜப்பானைத் தவிர எல்லா இடங்களிலும் ஓப்பன்ஹெய்மர் வெளியானது. கிறிஸ்டோபர் நோலன் இரண்டாம் உலகப்போரில் நடந்த முதல் அணுகுண்டு தாக்குதலில் ஜப்பான் மக்கள் பட்ட இன்னல்களை மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன.
இந்த நிலையில் ஓப்பன்ஹெய்மர் அடுத்த ஆண்டு ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகும் எனத் திரைப்படத்தின் வெளியீட்டாளர் பிட்டர்ஸ் என தெரிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிப்பில் ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த முக்கிய பங்கின் மீதான தார்மீகக் குழப்பத்தை மையமாக வைத்த இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜப்பானில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.