For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுட்டெரிக்கும் வெயில் - கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

09:40 AM Apr 01, 2024 IST | Web Editor
சுட்டெரிக்கும் வெயில்   கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்
Advertisement

கோடையில் கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கோடைகாலத்தில் கண் அழற்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக  கண் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30% முன்னிலை!

இதுகுறித்து கண் நல மருத்துவர்கள்  கூறியதாவது:

"கோடை காலத்தில்,  உலர்விழி,  கண் அழற்சி,  புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு,  ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.  கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது உலர் விழி பிரச்னை ஏற்படுகிறது.  இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கலாம்.

இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது. இதைத் தவிர்க்க அசுத்தமான கைகளால் கண்களைத் தொடக் கூடாது.

சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்வீச்சு பல கண் நோய்களை விளைவிக்கக் கூடும். கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, புறஊதா கதிர்களால் ஏற்படும் ஃபோட்டோகரட்டாடிஸ் ஆகியவை இதனால் ஏற்படும். இத்தகைய பாதிப்பைத் தவிர்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம். கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தைக் குறையாமல் காக்கும் பானங்களை அருந்த வேண்டும்"

இவ்வாறு கண் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement