5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து ஆபரேஷன் - நுரையீரல் கட்டியை அகற்றும் வீடியோ வைரல்!
மருத்துவர் ஒருவர் 5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொழில்நுட்பங்கள் உருவான பிறகு இந்த உலகத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட, சாத்தியமே இல்லை என கருதப்பட்ட அனைத்தும் வெற்றிகரகமாக சாத்தியமாக்கப்பட்டன. தொழில்நுட்பத்தின் வரவை வரலாற்று ஆய்வாளர்கள் ‘பெரும் புரட்சி’ என குறிப்பிடுகின்றனர்.
ஆனால் 5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து கொண்டு நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றியுள்ளார். நுரையீரல் கட்டி ஒன்று உருவாகிய நிலையில் அதனை அகற்றுவதற்காக நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நோயாளி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து சுமார் 5,000 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே வெற்றிகரமாக அதனை மருத்துவர் அகற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.