வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்கள் தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு. வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருதம் இருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிச.12-ம் தேதி வெகு விமர்சையாக தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி முதல் நாள் பகல்பத்து உற்சவத்தின் திருமொழி திருவிழா 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையும் படியுங்கள்: சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக இந்த நன்நாளை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருமாள் புகைப்படம், ஆஞ்சநேயர் புகைப்படம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில்களும் கண்களை கவரும் வண்ணமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததது. மேலும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும். தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி அன்று சொர்க்கவாசல் மூடப்படும்.