For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Open AI உடன் இணையும் ஆப்பிள்? வெளியான தகவல்!

10:00 AM May 31, 2024 IST | Web Editor
open ai உடன் இணையும் ஆப்பிள்  வெளியான தகவல்
Advertisement

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு (AI) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 18ல், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த அறிவிப்பு ஜூன் 10ம் தேதி நடக்கும் ஆப்பிளின் தொழில்நுட்ப உருவாக்குநர்கள் மாநாட்டில் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.  இந்த உடன்பாட்டின் பேரில் சாட்ஜிபிடியை, ஆப்பிளின் செய்யறிவு உதவியாளரான சிரியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது சிரியை இன்னும் திறன் வாய்ந்ததாக மாற்றும்.   சாட்ஜிபிடியின் வளர்ச்சியில் அதிகளவில் பங்கு கொண்டிருக்கும் மைக்ரோசாஃப்ட்,  அதன் தரவு மையங்களை சாட்ஜிபிடிக்கு வழங்கியுள்ளது.  தொடர்ந்து, ஆப்பிள் சாட்ஜிபிடியுடன் இணைந்தால் மைக்ரோசாஃப்டின் தரவு மையங்களை ஆப்பிள் பயனர்கள் பயன்படுத்தத் தொடங்குவர்.

இதற்காக ஓபன்ஏஐயின் எதிர்கால லாபத்தில் 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு  மைக்ரோசாஃப்ட் பங்குக் கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஆப்பிளும்,  பயனர்களின் தரவுகள் வழியாக செய்யறிவு திறனை மேம்படுத்தும் சாட்ஜிபிடியும் விவகாரமான பொருத்தம் என தொழில்நுட்ப ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  அதனுடன் இது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Tags :
Advertisement