For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி ‘No Aunties’ - தென்கொரிய ஜிம் விளம்பரத்தால் சர்ச்சை!

02:18 PM Jun 18, 2024 IST | Web Editor
அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி ‘no aunties’   தென்கொரிய ஜிம் விளம்பரத்தால் சர்ச்சை
Advertisement

தென்கொரியாவின் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில்  “அழகான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என வைக்கப்பட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தென்கொரியாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் விளம்பர பலகை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  தென்கொரியாவின் இன்சியா நகரத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் “நன்னடத்தை மற்றும் நேர்த்தியான கட்டமைப்பை உடைய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்ற வாசகத்தோடு விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளது.  இந்த அறிவிப்பு அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘Off limits to ajumma & only elegant women allowed’ என்ற வாசகத்தை கொண்ட விளம்பர பலகையை வைத்துள்ளது.  தென்கொரியாவில் அஜூம்மா என்ற வார்த்தை 30வயதுக்கு மேற்பட்ட,  திருமணமான அல்லது நடுத்தர வயதுப் பெண்களை குறிக்கும் வார்த்தையாகும்.

இதுகுறித்து ஜிம்மின் உரிமையாளர் கூறியுள்ளதாவது;

“வயதான பெண்களின் சில செயல்களால் இளம்பெண்கள் பலர் உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு வர மறுக்கின்றனர்.  அவர்கள் மற்றவர்களின் உடல்களை பார்த்து தேவையற்றதை பேசுவார்கள்.  சில பொருட்களையும் திருடுவார்கள்.  அவர்களின் நடத்தை காரணமும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.

இது பெண்களை அவமதிப்பாதாக இருப்பதாக பல கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

Tags :
Advertisement