Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்னும் 2 நாட்கள் தான்... BTS ரசிகர்களுக்கு விருந்து வைக்க வருகிறது 'Hope on the Street'

10:24 AM Mar 26, 2024 IST | Jeni
Advertisement

BTS உறுப்பினர் ஜே-ஹோப்பின் வாழ்க்கைப் பயணம் குறித்து பேசும் ஆவணத் தொடரான,  ‘Hope on the Street’ நாளை மறுநாள் வெளியாக உள்ளதால்,  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Advertisement

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS. ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது பாடல்கள் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக பல இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில் BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் ராணுவ பயிற்சி பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ பயிற்சியை முன்னிட்டு BTS உறுப்பினர்கள் முன்னதாகவே தங்களது சோலோ பாடல்கள்,  ஆல்பத்திற்கான பணிகளை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.  ஜங்கூக்கின் ‘கோல்டன்’ ஆல்பம், V-ன் டிஜிட்டல் சிங்கிள் 'FRI(END)S' உள்ளிட்டவை முன்னதாகவே தயார் செய்யப்பட்டு,  அவர்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வெளியானது. ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படியுங்கள் : வெற்றிக் கணக்கை தொடங்கியது ஆர்சிபி - பஞ்சாபை வீழ்த்தி த்ரில் வெற்றி

இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 28)  BTS உறுப்பினர் ஜே-ஹோப்பின் ஆவணத் தொடரான 'Hope on the Street' வெளியாக உள்ளது.  6 எபிசோட்டுகள் இந்த ஆவணத் தொடரில் இடம்பெற்றுள்ளது.  ‘பிரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது. இந்த ஆவணத் தொடரில் ஜே-ஹோப், BTS-ல் சேர்வதற்கு முன்னர் தெருக்களில் நடனமாடும் ‘ஸ்ட்ரீட் டேன்சர்’ ஆக இருந்தது குறித்த பகுதிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 6 பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

Tags :
BTSBTSARMYHobiHopeontheStreetJHopekoreaKpop
Advertisement
Next Article