For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம் : மனைவி, குழந்தைகளை சுட்டுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட காவலர்!

08:47 PM Dec 15, 2023 IST | Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்   மனைவி  குழந்தைகளை சுட்டுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட காவலர்
Advertisement

தெலங்கானாவில், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஆயுதப்படை காவலர், மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தானும் உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படை காவலர் ஆக்குல நரேஷ். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான ஆக்குல நரேஷ் பல மாதங்களாக தனக்கு கிடைத்த மொத்த சம்பளத்தையும் சூதாட்டத்திற்காக பயன்படுத்தி இழந்துள்ளார். விட்டதை பிடிக்கலாம் என்ற ஆவலில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் லட்சக்கணக்கில்  கடன் வாங்கி மீண்டும் சூதாட்டம் ஆடி இருக்கிறார்.

மேலும் வட்டிக்கு பணம் வாங்கியும் ஆக்குல நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கணவரின் தவறை அவருடைய மனைவி சைதன்யா சுட்டிக்காட்டி கண்டித்திருக்கிறார். மனைவியின் கண்டிப்பால் கோபமடைந்த நரேஷ்  திடீரென்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேராக தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று மகன் ரேவந்த், மகள் ஹேமஸ்ரீ ஆகியோரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த சர்வீஸ் ரிவால்வர் மூலம் குழந்தைகள் இரண்டு பேரையும் சுட்டு கொலை செய்த நரேஷ், மனைவியையும் சுட்டு கொலை செய்து இருக்கிறார்.

தொடர்ந்து தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ்காரர் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில்
வசிப்பவர்கள் ஓடி சென்று பார்த்த போது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து
கிடந்தது தெரிய வந்தது. இது பற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆக்குல நரேஷ் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். குடும்ப உறுப்பினர்களை  சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவத்திற்கு காரணம் ஆன்லைன் சூதாட்டமா அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement