Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் சீரமைப்பு பணிகள் | ஆக.3 வரை நீலகிரி மலை ரயில் ரத்து!

09:49 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை ஆக.3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisement

நீலகிரி மாவட்டம் கல்லார் – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே இன்று இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தொடர்வதால் நாளை, நாளை மறுநாள் என மேலும் இரண்டு நாட்களுக்கு மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
Mountain RailNilgirisSouthern RailwaysTrain cancel
Advertisement
Next Article