திமுக கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - 4 பேர் காயம்!
ஊத்தங்கரை அருகே திமுக கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..
11:47 AM Mar 24, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றுமாறு திமுகவினருக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த, மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கிய திமுக கிளை கழக செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.
மேலும் ஆறுமுகம், பெருமாள், பூபாலன், சர்க்கரை ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்