Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோடை விடுமுறை நிறைவு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!

08:28 AM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

ஒரு மாத கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கயுள்ளது. 

Advertisement

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரம் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3வது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4வது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தன.

இதையும் படியுங்கள் : டி20 உலகக்கோப்பை : பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி!

இதையடுத்து, ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது. மே மாதம் முழுவதும் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்   நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
Chennaichennai High CourtHigh Court Madurai BranchMaduraiSummer Vacation
Advertisement
Next Article