எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
03:00 PM Feb 19, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             இந்நிலையில் இந்த வழக்கில் அவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கபட்டது.  இதனையடுத்து எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 1 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.  தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மேல்முறையீடு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மனுவை ஏற்று தண்டனை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
                 Advertisement 
                
 
            
        கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
 Next Article