Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!

02:14 PM Oct 31, 2024 IST | Web Editor
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு கிலோ பட்டாசு ரு.399 விற்றதால் மக்கள் கூட்ட அலைமோதியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஒரு கிலோ பட்டாசு 399 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பட்டாசு கடையில் மக்கள் முந்திக்கொண்டு குவிந்தனர். கூட்டம் அலைமோதியதோடு, தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

Tags :
CrackersDiwali CelebrationDiwali SpecialDiwali2024Happy Diwali Indianews7 tamilNews7 Tamil Updatessivakasi
Advertisement
Next Article