For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை... இதுதான் மோடி அரசின் சாதனையா”? - தமிமுன் அன்சாரி கேள்வி!

01:14 PM Apr 08, 2024 IST | Web Editor
“ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை    இதுதான் மோடி அரசின் சாதனையா”    தமிமுன் அன்சாரி கேள்வி
Advertisement
ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார்.  இதுதான் மோடி அரசின் சாதனையா? என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார். 
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து மஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி இன்று பரப்புரை மேற்கொண்டார்.  அமைச்சர் நேரு,  எம்.பி அப்துல்லா,  எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.  பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, பிறகு அய்யர்மலை பகுதியில் பேசியதாவது;
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி கூறினார்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  மோடி ஆட்சியில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேட்டு விவசாயிகள் போராடுகிறார்கள்.  போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை மறக்க முடியாது.
16 மாதங்கள் டெல்லியில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதை மறக்க முடியாது.  இவர்கள் ஆட்சியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார் என்ற அவல நிலை உள்ளது.
இதுதான் மோடி அரசின் சாதனையா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள்.  செய்தார்களா? ஒரு வருடத்திற்கு 70 லட்சம் வேலை இல்லா பட்டதாரிகள் உருவாகிறார்கள்.  வேலை இல்லா திண்டாட்டம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை தீர்மானிக்க சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளார்கள்.  100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றும், அதற்கு தினக்கூலி 400 ரூபாயாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
ஏழை பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படும் என்பது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை மக்களிடம் தாக்கத்தை உருவாக்கியிருப்பதோடு, ஆட்சி மாற்றத்திற்கான அலையையும் ஏற்படுத்தியுள்ளது”
இவ்வாறு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேசினார்.
Advertisement
Tags :
Advertisement