For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Onam2024 - பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், #TVKChief விஜய் வாழ்த்து!

12:16 PM Sep 15, 2024 IST | Web Editor
 onam2024    பிரதமர் மோடி  முதலமைச்சர் மு க ஸ்டாலின்   tvkchief விஜய் வாழ்த்து
Advertisement

கேரள மக்களின் முக்கிய பண்டிகளைகளில் ஒன்றான திருவோணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாள மக்களும் கொண்டாடும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து கோயிலில் சாமி தரிசனம் செய்வர்.

குடும்பத்துடன் பலவித உணவு வகைகளை சமைத்து கடவுளுக்கு படைத்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருவதாக மலையாள மக்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர், பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

``உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதரர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். ஒரு பெரிய இயற்கைப் பேரழிவின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம், நம்பிக்கையையும் வலிமையையும் கொண்டு வரட்டும். இந்த ஓணம், மலையாளிகளின் ஒற்றுமையையும் உயிர்வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து!

``அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் அமைதி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிலவட்டும். இந்த திருவிழா கேரளத்தின் புகழ்பெற்ற கலாசாரத்தை கொண்டாடுகிறது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து!

``அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஓணம் வாழ்த்துக்கள். இந்த அழகான திருவிழாவின் மகிழ்ச்சியான உணர்வு உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ``மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்’’ என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement