For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Onam பண்டிகை: சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

06:38 AM Sep 13, 2024 IST | Web Editor
 onam பண்டிகை  சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
Advertisement

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

"சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு இன்று (செப். 13) பிற்பகல் 3.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06160) புறப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலிக்கு நாளை காலை 8.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் (கோவை), பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (செப். 13) பிற்பகல் 3.10 மணிக்கு மங்களூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06161) புறப்படுகிறது. இந்த ரயில் நாளை காலை 8.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். மேலும், இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், நீலேஸ்வரம், காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் (06162) நாளை மறுநாள் (செப்.15) மாலை 6.45 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு, செப்.16ம் தேதி காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கண்ணூருக்கும் நாளை (செப். 14) இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06163) புறப்படுகிறது. இந்த ரயில் நாளை மறுநாள் பகல் 1.30 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக, இந்த ரயில் செப்.16 அன்று கண்ணூரிலிருந்து பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை வந்தடையும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement