For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Onam பண்டிகை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

07:47 PM Sep 12, 2024 IST | Web Editor
 onam பண்டிகை   நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
Advertisement

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (செப்டம்பர் - 13ம் தேதி ) நடை திறக்கப்பட உள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இதையும் படியுங்கள் : "திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர்" - #SitaramYechury மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

மறுநாள் (14-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி திருவோண பூஜை நடைபெற உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும். 16-ந் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement