For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு.!

08:49 AM Dec 23, 2023 IST | Web Editor
வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு
Advertisement

வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

Advertisement

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் மார்கழி மாத சொர்க்கவாசல் திறப்பு திருச்சி ஸ்ரீரங்கம்,  மதுரை கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பெரும்பாலான பூக்களின் வரத்து தற்போது குறைந்துள்ளது.  இதனால் பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

  • மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1000 ரூபாய் அதிகரித்து 2,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • சம்பங்கி பூ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 70 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • அரளிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 250 அதிகரித்து 350 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • கனகாம்பரம் 700 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 800 அதிகரித்து 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • சாமந்திப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 150 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • குண்டு மல்லி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 200 அதிகரித்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சாக்லேட் ரோஸ் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 50 அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கனகாம்பரம் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 800 ரூபாய் அதிகரித்து 1500 ரூபாய்க்கு விற்பனை சய்யப்படுகிறது.
  • பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 60 அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags :
Advertisement