For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மார்கழி மாதம் பிறப்பு - ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை!

08:53 AM Dec 17, 2023 IST | Web Editor
மார்கழி மாதம் பிறப்பு   ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை
Advertisement

மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் நேற்று (டிச.16) இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Advertisement

108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக பிறந்து, ஸ்ரீ ரங்கநாதருக்கு பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி அரங்கனை அடைந்தார். ஆண்டாள் அரங்கனை அடைய  மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பிருந்து திருப்பாவை பாடினார். ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதனடிப்படையில், நேற்று (டிச.16) இரவு 09.35 மணிக்கு மார்கழி மாத முதல் நாள்
பிறப்பையொட்டி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினமான வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் மற்றும்  ஸ்ரீரங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 30 திருப்பாவைகள் அடங்கிய தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

திருமணமாகாத பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமணம் நடக்கும் எனும் நம்பிக்கை கொண்டு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல்  ஸ்ரீஆண்டாளுக்கு மார்கழி மாதம் 30 நாட்களும் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement