கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!
08:30 AM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Advertisement
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூக்களின் விலை நிலவரம்;
- ஐஸ் மல்லி கடந்த வாரம் ஒரு கிலோ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 400 ரூபாய் அதிகரித்து 1300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சம்பங்கி பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 80 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- முல்லை மற்றும் ஜாதி மல்லி கடந்த வாரம் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 150 ரூபாய் அதிகரித்து 900 ரூபாக்கு விற்பனை செய்யப்டுகிறது.
- பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 70 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அரளிப்பூ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து நிலையில் இன்று 80 ரூபாய் அதிகரித்து இன்று 180 ரூபாயாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கனகாம்பரம் 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சாமந்திப்பூ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 50 ரூபாய் அதிகரித்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- செண்டு மல்லி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 40 ரூபாய் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தீபாவளி பண்டிகையின் போது பூக்களின் விலை சராசரியாக காணப்பட்டு வந்த நிலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.