காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்காக உயர்வு!
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய மனதுக்கு விருப்பமானவர்களிடம் காதலை வெளிப்படுத்தி, அன்பைப் பகிரும் நாளாக ‘காதலர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை, ஒரு வாரம் காதலர் தின வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. ரோஸ் டே, ப்ரொப்போஸ் டே, சாக்லேட் டே, டெட்டி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலென்டைன்ஸ் டே என 7 நாட்களுக்கு 7 விதவிதமான தினங்களை காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
காதலன்/காதலியிடம் ரோஜா பூ, மோதிரம், க்ரீட்டிங் கார்டுகளை கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் ரோஜா பூக்களின் விற்பனை பிப்ரவரி மாத தொடக்கத்தில் படுஜோராக நடைபெறும். அதேபோல் அதன் விலையும் உயர்ந்து காணப்படும்.இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு!
அந்த வகையில் இந்தாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையில், சிவப்பு ரோஜா ஒன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 15 ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.300 முதல் 350 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500, சம்பங்கி ரூ.200, பன்னீர் ரோஜா ரூ.200, அரளி ரூ.100, கனகாம்பரம் ரூ.900, சாமந்தி ரூ.70, சாதி மல்லி ரூ.800, சாக்லேட் ரோஸ் ரூ.170 என விற்பனை செய்யப்படுகிறது.